உலக செய்திகள்

கருணாநிதியின் உடல் நிலை மோசமாகிறது அவரை யாரும் நேரில் பார்க்க வர வேண்டாம் – மருத்துவக் குழு அறிக்கை…


உடல்நலக் குறைவு காரணமாக திமுக தலைவர் கருணாநிதிக்கு வீட்டிலேயே வைத்து வசதிகள் செய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதனால் அவரை பார்க்க யாரும் வரவேண்டாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து கருணாநிதிக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அவர்கள் கட்சிப்பணிகளில் ஈடுபடாமல் இருந்த நிலையில் அவருக்கு கடந்த 24ம் திகதி ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக கடுமையாக பரிக்கப்பட்டிருந்தார்.

இதனால் கருணாநிதிக்கு விசேட மருத்துவர்கள் வீட்டில் வைத்தே சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்தநிலையிலி நேற்றிரவு(27) மருத்துவர்களினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கருணாநிதியின் உடல் நலத்தில் வயதின் காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது

எனவும் தற்போது சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக காய்ச்சல் வந்துள்ளதாகவும் அவரை 24 மணி நேரமும் மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் அடங்கிய குழு கவனித்துக் கொள்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் கருணாநிதியின் உடல் நிலையை கவனத்தில் கொண்டு, அவரை யாரும் நேரில் பார்க்க வர வேண்டாம் எனவும் அதில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது

Related posts

ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் பதவியில் நீடிக்கும் வாய்ப்பை மறுத்து விலகுகிறார் ஹுஸைன்..

wpengine

இந்தோனேசியாவில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…

wpengine

விற்பனைக்கு வருகிறது அதிக புரதம் அடங்கியுள்ள கரப்பான்பூச்சிப் பால்

wpengine