உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கம்மன்பில தொடர்பில் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் சட்டத்தரணி லசித



பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில அவுஸ்திரேலிய வர்த்தகர் பிரயின் செடிக்கிற்கு சொந்தமான கம்பனியின் பங்குகளை போலியான ஆவணங்களை தயாரித்து உடைமையாக்கி கொண்டுள்ளார் என பிரயின் செடிக்கின் அற்றோனி தத்துவ பொறுப்பாளர் சட்டத்தரணி லசித பெரேரா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

கொழும்பு தேசிய நூலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், கூறுகையில் பிரயின் செடிக்கிற்கு சொந்தமான பங்குகள் அற்றோனி பத்திரத்தினூடாக பேன் ஏசியா நிறுவனத்திற்கு மாற்றப்பட்டது. குறித்த நபரின் 1.7 மில்லியன் பெறுமதியான பங்குகளை போலியான ஆவணங்களை பயன்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில மக்கள் வங்கியில் தனது சொந்த கணக்கிற்கு மாற்றியுள்ளமைக்கான சகல ஆவணங்களும் என்னிடம் உள்ளது.

குறித்த ஆவணங்களை பொலிஸாரிடமும் சமர்ப்பித்து முறைப்பாடொன்றையும் பதிவு செய்துள்ளேன். எனத் தெரிவித்தார்.

நன்றி – வீரகேசரி

Related posts

நாலக டி சில்வா சற்று முன்னர் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு..

wpengine

சந்தேகத்துகத்துக்கிடமான நபர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு உடன் அறிவிக்கவும்…

wpengine

இன்று முன்னெடுக்கவுள்ள மே தினக் கூட்டங்கள்…

wpengine