உள்நாட்டு செய்திகள்

கம்பஹா மாவட்டத்திற்கு வாக்குப்பெட்டிகளை விநியோகிக்கும் பணிகளில் தாமதம்..



நாளை(10) நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தல் கடமைகளில் ஈடுபடுகின்ற அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் சரியான நேரத்தில் வழங்கப்படாமையால் வாக்களிப்பிற்காக கம்பஹா மாவட்டத்திற்கு வாக்குப்பெட்டிகளை விநியோகிக்கும் பணிகளிலும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.

கம்பஹா மாவட்டத்திற்குறிய வாக்குப் பெட்டிகள் வெயாங்கொடை, சியனே தேசிய கல்வியியற் கல்லூரியின் விஞ்ஞான பீடத்திற்கு இன்று(09) காலை 08 மணிக்கு கொண்டு செல்லப்பட இருந்தது.

எனினும், இன்று(09) காலை 10 மணி தாண்டியும் வாக்குப் பெட்டிகளை குறித்த மத்திய நிலையத்திற்கு வழங்க முடியாத நிலை எற்பட்டுள்ளது.

அந்த வாக்கெடுப்பு நிலையத்தில் கடமைகளில் ஈடுபடவுள்ள அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்களை வழங்குவதில் ஏற்பட்ட தாமதமே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

#rishma

Related posts

தொடர்ந்தும் பிரச்சினையை இழுத்தடிக்க முடியாது-சஜித்

wpengine

நீர்வழங்கள் வடிகாலமைப்பு ஊழியர்கள் நாளை நாடாளாவிய ரீதியாக பணிப் புறக்கணிப்பில்..

wpengine

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க நடவடிக்கை..

wpengine