உள்நாட்டு செய்திகள்

கப்பல் விபத்தில் காணாமல்போன மீனவர்களை தேட விசேட சுழியோடிகள் குழு…


காலி கடற்பரப்பிலிருந்து, 30 மைல் கடல் தொலைவில் வைத்து கப்பலொன்றுடன் மோதி விபத்துக்குள்ளான மீனவப் படகிலிருந்து காணாமல் போன இரண்டு மீனவர்களைத் தேடும் பணியில் கடற்படையின் விசேட சுழியோடிகள் குழு ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டோரா படகொன்று குறித்த கடற்பரப்பில் காணாமல் போன மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், குறித்த விபத்தை ஏற்படுத்திய கப்பல் எந்த நாட்டுக்குரியது என்பது குறித்து, இதுவரை தகவல்கள் கிடைக்கவில்லையென்றும், கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கமான்டர் தினேஸ் பண்டார தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற இந்த விபத்தில், பலப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் உயிரிழந்ததுடன், இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

முடக்கப்பட்ட பகுதிகள் மீளவும் முடக்கப்படலாம்

wpengine

சட்டவிரோதமாக மாணிக்கககல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது…

wpengine

பிரதமர் பதவி சிரிபாலவுக்கு – தினேஷ் சுசில் ஒன்றிணைந்த குழு நியமனம்…

wpengine