உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கந்தானையில் அன்னை மரியாள் போன்று சுற்றித்திரிந்த பெண் யார் – பொலிஸார் வெளிப்படுத்திய தகவல்..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  அண்மையில் கந்தானை பிரதேசத்தில் ‘அன்னை மரியாள்’ போன்ற ஆடைகளை அணிந்து சுற்றித்திரிந்த பெண் தொடர்பிலான விபரங்களை பொலிஸார் வெளிப்படுத்தியுள்ளனர்.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோ காட்சிகள் பொதுமக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியதுடன், குறித்த பெண்ணைப் பற்றி பல கேள்விகளை எழுப்பியது.

குறிப்பிட்ட சமூக இணையத்தளம் ஒன்றின் படி, கந்தானைப் பொலிஸாரிடம் இருந்து குறித்த பெண்ணிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அவர் ஒரு ரஷ்ய நாட்டவர் என தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் அவர் தியானத்தில் ஈடுபட்டதாகவும், இலங்கைக்கு சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டதாகவும் தெரியவந்துள்ளதாக கந்தானை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த பெண் எந்தவிதமான மனநோயினாலும் பாதிக்கப்படவில்லை என தெரிவித்துள்ள கந்தானை பொலிஸார், தியான உடையில் இருந்த குறித்த பெண் கந்தானையில் சுதந்திரமாக நடமாடிய போது, பல்வேறு காணொளி காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

Related posts

பேருவளை மீன்வள துறைமுகத்திற்கு மக்களை மட்டுப்படுத்த நடவடிக்கை

wpengine

டயானா கமகே வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை உத்தரவு..!

wpengine

அமெரிக்க கப்பல் மீது, ஹூதிகள் தாக்குதல் – செங்கடல் அமெரிக்கர்களுக்கு கல்லறையாக மாறும், அவர்கள் அவமானத்துடன் அந்த பகுதியை விட்டு வெளியேறுவார்கள் என எச்சரிக்கை..!

wpengine