உள்நாட்டு செய்திகள்

கண்டிய திருமணச் சட்டத்தை இரத்து செய்யும் சட்டமூலம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கண்டிய திருமணச் சட்டத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலமொன்று விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கண்டிய திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தை நீக்கும் தனிநபர் பிரேரணையாக இந்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அதற்கமைய, 1952 ஆம் ஆண்டு 44 இலக்க கண்டிய திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தை நீக்குவதற்கு யோசனை முன்வைக்கப்படவுள்ளது.

இலங்கையின் சாதாரண திருமண சட்டம் மற்றும் முஸ்லிம் திருமண சட்டம் ஆகியன தொடர்பில் திருத்தங்களுடனான நான்கு சட்டமூலங்களை அத்துரலியே ரத்தன தேரர் மற்றும் டொக்டர் துசிதா விஜேமான்ன ஆகியோர் ஏற்கனவே பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்

wpengine

இணக்கப்பாடு எட்டினால் “ஶ்ரீலங்கா நிதஹஸ் பொதுஜன பெரமுன” எனும் பெயரில் புதிய கட்சி

wpengine

மஹிந்தவுடனான முதலமைச்சர்களது பேச்சுவார்த்தை தோல்வியில்…

wpengine