உள்நாட்டு செய்திகள்

கட்டுவாபிட்டி தேவாலயம் எதிர்வரும் ஜூலை 21 மீண்டும் திறப்பு



(FASTNEWS|COLOMBO) – ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் புனரமைக்கப்பட்ட நீர்கொழும்பு கட்டுவாபிட்டி தேவாலயம் எதிர்வரும் ஜூலை 21 ஆம் திகதி மீண்டும் திறந்து வைக்கப்படவுள்ளதாக கொழும்பு பிரதி ஆயர் வண. கலாநிதி ஜே.டி. அந்தோனி ஜயகொடி தெரிவித்துள்ளார்.

பொரளையில் நேற்று(17) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக விசேட ஆராதனைகள் நடத்தப்படுமெனவும், தேவாலயம் மீளவும் திறந்து வைக்கப்பட்ட பின்னர், மக்களுக்கான நிவாரணத் திட்டங்கள் ஆரம்பிக்கப்படுமெனவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

சர்வதேச அங்கீகாரத்தை பலவீனப்படுத்தாதீர்கள் : அமெரிக்கா இலங்கைக்கு மீண்டும் வலியுறுத்தல்…

wpengine

எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல பாகங்களிலும் கடும் மழை..

wpengine

லயன் குடியிருப்பில் தீப்பரவல் – 12 வீடுகள் தீக்கிரை

Azeem Kilabdeen