உள்நாட்டு செய்திகள்

கட்டுநாயக்கவிலிருந்து சீனா வரையிலான விமான சேவை மீண்டும் ஆரம்பம்…


சீனாவில் தாக்கம் செலுத்தியுள்ள சூறாவளி காரணமாக, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சீனா நோக்கி பயணிக்கவிருந்த விமானம் நேற்று(16) இடைநிறுத்தப்பட்ட நிலையில் இன்று(17) அதிகாலை மீண்டும் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.

தாமதமடைந்த ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல். 880 விமானம் இன்று(17) அதிகாலை சீனாவின் கென்டன் நகருக்கு புறப்பட்டது.

இந்நிலையில், தற்போது விமான சேவைகள் தாமதமின்றி முன்னெடுக்கப்படுவதாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் நிலவிய சூறாவளி நிலைமையை கருத்திற்கொண்டு, சீனாவின் குவன்ஸூ விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.

Related posts

விரைவில் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ள தம்மிக்கவும், பவித்திராவும்

wpengine

வர்த்தக நிலையங்களுக்கான அறிவித்தல்

wpengine

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பிரதேச அபிவிருத்தி அமைச்சராக பதவிப்பிரமாணம்

wpengine