உள்நாட்டு செய்திகள்

கட்டாக்காலி நாய்களைக் கொல்லும் திட்டமொன்று எமது அமைச்சிடம் இல்லை – அமைச்சர் முஸ்தபா..



வெசாக் கொண்டாட்டம் ஆரம்பமாவதற்கு முன்னர், கட்டாக்காலி நாய்களைக் கொல்லும் திட்டமொன்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சிடம் இருந்ததாக வெளியான தகவலை அவ்வமைச்சின் அமைச்சர் பைஸர் முஸ்தபா நிராகரித்துள்ளார்.

“..நான், பொறுப்பாகவிருக்கின்ற அமைச்சின் மூலமாக தெரு நாய்களைக் கொல்லப் போவதாக, சமூக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. குறித்த அந்தச் செய்தி தொடர்பில், தெளிவுப்படுத்தும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தான், ஒரு முஸ்லிமாக இருப்பதனால் இன முரண்பாட்டை உருவாக்கும் முயற்சி காரணமாக, தெரு நாய்களைக் கொல்லும் முயற்சியில் தான் ஈடுபட்டுள்ளதாகப்​ பொய்யான பிரசாரம் முன்னெடுக்கப்படுகிறது..” என அமைச்சர் ​வலியுறுத்தியிருந்தார்.

ஆனால், கூறப்படுவதற்கு மாறாக தனது அமைச்சு, விலங்குகளைக் பாதுகாப்பதற்காக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.

(rizmira)

Related posts

2019 ஆம் ஆண்டுக்கான, மண்முனைப்பற்று பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டமானது தோல்வி…

wpengine

சிசிலிய தொடர்பிலான தீர்ப்பு 11ம் திகதியன்று

wpengine

முல்லைத்தீவு விசுவமடுவில் இரு பெண்களைக் கூட்டுப் பாலியல்வல்லுறவுக்கு உட்படுத்திய படையினரின் விசாரணைகள் முடிவடைந்தன

wpengine