Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கட்சிப் பதவிகளில் இருந்து இசுரு தேவப்பிரிய நீக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சிப் பதவிகளில் இருந்து மேல் மாகாண முன்னாள் முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இசுரு தேவப்பிரிய, ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவில் மற்றும் மஹரமக தொகுதி அமைப்பாளர் பதவியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தனவின் தலைமையில் மஹரமகவில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் இசுரு தேவப்பிரிய கலந்து கொண்டதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவிக்கையில் தான் கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அறிவித்த பின்னரே குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

Related posts

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் சுற்றுவட்டார வீதிக்கு பூட்டு

wpengine

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல்கள் ஆரம்பம்

wpengine

விமான வான் சாகச கண்காட்சி நிறைவு

wpengine