உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம்…


சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் இன்று(05) முற்பகல் 10.30 மணியளவில் பாராளுமன்றம் கூடவுள்ளது.

இதற்கு முன்னர் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் ஒன்று இன்று(05) காலை 9.30க்கு சபாநாயகர் கருஜெயசூரியவின் தலைமையில் நடைபெறவுள்ளது.

இதன்போது இன்றைய பாராளுமன்றம் அமர்வின் செயற்பாடுகள் குறித்து தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய பாராளுமன்ற அமர்வைப் புறக்கணிப்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நேற்று தீர்மானித்திருந்தது.

இதேவேளை இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது, பொதுமக்கள் பார்வைகூடம் மற்றும் விசேடவிருந்தினர் கூடம் என்பன மூடப்பட்டிருக்கும் என்று சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது.

Related posts

நாமல் ராஜபக்ஷவுக்கு இன்று FCID முன்னிலையில் அழைப்பாணை

wpengine

ஊவா மாகாண சுகாதார அமைச்சுப் பதவி குமாரசிறியிடம் இருந்து அனுர’வுக்கு..

wpengine

லசந்த கொலை தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு…

wpengine