உலக செய்திகள்

கடும் வறட்சியில் 20 லட்சம் மக்கள் பாதிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | சாம்பியா) – காலநிலை மாற்றங்களின் காரணமாக தென் ஆப்பிரிக்க நாடான சாம்பியாவில் கடுமையான வறட்சி நிலவுகிறது.

இதன் காரணமாக தற்போது 20 இலட்சம் மக்கள் உணவு இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அதனால், பெண்கள், இலைகள் மற்றும் வேர்களை தேடி உணவை சேகரிக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சராசரியை விட தென் ஆப்பிரிக்க பகுதிகளில் வெப்பநிலை இரு மடங்கு அதிகம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க ஐக்கிய நாடுகள் அழைப்பு விடுத்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக மழை இல்லாத காரணத்தால், அங்கு விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Related posts

மன்மோகன் சிங் மறைவு – முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

Azeem Kilabdeen

பாகிஸ்தான் பிரதமர் சீனா விஜயம்

wpengine

ரஷ்ய ஜனாதிபதி புதின் உடனான சந்திப்பை இரத்து செய்தார் டிரம்ப்

wpengine