உலக செய்திகள்

கடும் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 19 பேர் மரணம்…



இந்தோனேசியாவின் ஜாவா தீவுகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்தோனேசியா நாட்டின் ஜாவா தீவுப்பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக நகரெங்கும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகள் மீது மண் சரிந்து விபத்து ஏற்பட்டதில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மையம் தெரிவித்துள்ளது.

கடும் மழை காரணமாக ஜாவா தீவில் உள்ள இரண்டு விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால், விமான போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜெயாவின் மறைவையொட்டி தமிழகத்தில் 7 நாட்களுக்கு துக்க தினமாக அறிவிப்பு (VIDEO)

wpengine

அமெரிக்கா – ரஷ்யா பேச்சுவார்த்தை வெற்றி…

wpengine

இலங்கை தமிழ் குடும்பத்தினை சந்தித்த அவுஸ்திரேலிய பிரதமர்

wpengine