உலக செய்திகள்

கடும் நிலச்சரிவு – முக்கிய நெடுஞ்சாலை மூடப்பட்டது..


ஜம்மு காஷ்மீரில் பெய்து வரும் கடும் மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து முக்கிய தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் நேற்று இரவு பெய்த கடும் மழை காரணமாக பல்வேறு நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் நாட்டின் பிற பகுதிகளை காஷ்மீர் பள்ளத்தாக்குடன் இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலையில் ராம்சு மாகர்கோட் பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டதால் சாலை மூடப்பட்டது.

அதேசமயம், தெற்கு காஷ்மீரில் உள்ள ஷோபியான் பகுதியை ஜம்முவில் உள்ள ரஜோரி, பூஞ்ச் பகுதியை இணைக்கும் 86 கிலோ மீட்டர் நீளம் கொண்ட முகல் சாலை போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளது.

இலகுரக வாகனங்கள் மட்டும் சாலையின் இரு புறங்களிலும் அனுமதிக்கப்படுகிறது. கனரக வாகனங்கள் ஒரு புறம் மட்டுமே இயக்கப்படுகிறது.

Related posts

மனித உரிமைகள் பேரவையின் 43வது கூட்டத் தொடர் இன்று

wpengine

வெள்ளைமாளிகை முற்றுகை; பாதாள அறைக்குள் பதுங்கினார் ட்ரம்ப்

wpengine

தென்கொரியா மீது கொடூரமாக தாக்க வீரர்களை தயார் படுத்துகிறது வடகொரியா ஜனாதிபதி…

wpengine