உள்நாட்டு செய்திகள்

கடுகண்ணாவ கற்குகை ஊடான போக்குவரத்து இடைநிறுத்தம்…



இலங்கையின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க கடுகண்ணாவ கற்குகையூடான போக்குவரத்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கற்குகைச் சந்தியிலுள்ள கற்பாறையில் கீறல் ஒன்று ஏற்பட்டுள்ளதனாலேயே இதனுடான வாகன போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கீறல் ஏற்பட்டுள்ள இந்தப் பகுதியை சீர் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ள போதிலும் இதன் காரணமாக பாறையின் உட்பகுதியில் வெடிப்பும் ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பிலும் வீதி அபிவிருத்தி அதிகார சபை தேசிய கட்டிட ஆய்வ நிறுவனம் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரிகள் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பு கண்டி வீதி அபிவிருத்தி செய்யப்பட்ட காலப்பகுதியான 1828- 1830 ஆண்டு காலப்பகுதியில் குறித்த இந்த கற்பாறை வீதி நிர்மாணிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஒரு கோடி பெறுமதியுள்ள மாணிக்கக் கற்களுடன் அளுத்கம நபரொருவர் கைது

wpengine

பிரதான PCR இயந்திரத்தில் கோளாறு 

wpengine

மண்சரிவு அபாய எச்சரிக்கை

wpengine