உள்நாட்டு செய்திகள்

கடல்வழியாக இலங்கைக்குள் ஊடுருவும் பாதாளகுழுக்களும் ஒத்துழைக்கும் அரசியல்வாதிகளும்



இன்டர்போலினாலினால் வெளியிடப்பட்டுள்ள சிவப்பு அறிக்கையில் கடல் வழியாக போதைப்பொருள் வியாபாரத்திற்கு தொடர்புடைய 3 பாதாள குழுக்கள் இலங்கை வந்துள்ளதாக புலனாய் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து குறித்த பாதாளக் குழுவினர் மூவரும் வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், குறித்த மூவர் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு கடல் வழி ஊடாக தப்பி சென்றுள்ளவர்கள் எனவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

மேலும், பாதாள குழுக்களை சேர்ந்த இவர்கள் கம்பஹா மாவட்ட அரசியல்வாதிகளுடன் கடந்த காலத்தில் தொடர்பு வைத்திருந்ததாகவும், அவர்களின் அரசியல் நடவடிக்கைகளுக்காக அவர்கள் வந்திருக்கலாம் எனவும் புலனாய்வு பிரிவினர் சந்தேகிக்கின்றனர்.

இந்நாட்டிற்கு வந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் குறித்த பாதாள குழு உறுப்பினர்கள் மூவர்களில் இருவர் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் இந்நாட்டை விட்டு சென்றுள்ளதாகவும் மற்றவர் 20 வருடத்திற்கு முன்னர் நாட்டை விட்டு சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

(riz)

Related posts

பிரதி அமைச்சர் பதவிகளின் மாற்றம் இன்று..?

wpengine

இன்று மாலை 6 மணி முதல் மூடப்படவுள்ளது [UPDATE]

wpengine

பலஸ்தீன் மண்ணில் இடம்பெறும் இனப்படுகொலைகளை இலங்கை ஊடகங்கள் மூடிமறைக்கின்றன – இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்..!

wpengine