உள்நாட்டு செய்திகள்

கடற் பகுதிகளில் தற்காலிகமான கொந்தளிப்பு..



வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதுடன், ஏனைய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதோடு, கடற் பகுதிகள் தற்காலிகமாக கொந்தளிப்பாகக் காணப்படுவதுடன், பலத்த காற்றும் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற் பகுதிகளில் காற்று மணித்தியாலத்துக்கு 30 – 40 Km வேகத்தில் வட கிழக்குத் திசையில் இருந்து வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மன்னாரில் இருந்து புத்தளம் ஊடாக கொழும்பு வரையிலான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் கூடிய கடற் பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 50 Km வரை அதிகரித்த வேகத்தில் காற்று வீசும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது, குறித்த கடற் பகுதிகள் ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

#reeshma

Related posts

சற்றுமுன் பொறல்ல பள்ளிவாயல் கல் வீச்சுத் தாக்குதல் அமைச்சர் றிசாத் அதிரடி விஜயம்

wpengine

ஜனாதிபதி தலைமையில் சிறுவர் ஊழியத்திற்கு எதிரான சர்வதேச தினம்

wpengine

பாராளுமன்றம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் விசேட பாதுகாப்பு…

wpengine