உள்நாட்டு செய்திகள்

கடற்பாதுகாப்பு அலுவலகங்களுக்கான அவசர தொலைபேசி சேவை அறிமுகம்.



இலங்கை – இந்திய கடற்தொழிலாளர்கள் மத்தியில் நிலவும் பிரச்சினைகளை தீர்க்கும் ஒரு கட்டமாக, இந்திய மற்றும் இலங்கை கடற்பாதுகாப்பு அலுவலகங்களில் அவசர உதவி தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இலங்கை மற்றும் இந்திய அமைச்சர்கள் மட்ட பேச்சுவார்த்தையின் போது இதற்கான இணக்கம் காணப்பட்டிருந்தது.

இதன்படி இந்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையை தற்போது இந்திய பாதுகாப்பு அமைச்சு ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பாகிஸ்தானுக்கு பின்னர் இந்தியாவுடன் அவசர உதவி தொலைபேசி அழைப்பு சேவையை நடத்தும் இரண்டாவது நாடாக இலங்கை பரிணமிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அஜித் ரோஹணவுக்கு கொவிட் தொற்று

wpengine

பாராளுமன்ற மோதல் தொடர்பிலான அறிக்கை 12ம் திகதி சபாநாயகருக்கு…

wpengine

அனுராதபுரம் வைத்தியர் விவகாரம் – கைதான நபரின் வீட்டில் கைக்குண்டு

Azeem Kilabdeen