உள்நாட்டு செய்திகள்

கடற்படையின் முன்னாள் தளபதி குற்றப்புலனாய்வுப் பிரிவு முன்னிலையில்..


கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரணாகொட இன்று(05) குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு முன்னிலையாகவுள்ளார்.

தெஹிவளையில் ஐந்து தமிழ் இளைஞர்கள், 2008ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் திகதி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்கவே அவர் இன்று சீஐடியால் அழைக்கப்பட்டுள்ளார்.

குறித்த இந்த சம்பவம் தொடர்பில் ஏலவே இடம்பெறும் விசாரணைகளின் ஒருகட்டமாகவே கரணாகொட இன்று விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

கரணாகொடவின் மெய்ப்பாதுகாவலராக கடமையாற்றிய லெப்டினன்ட் கொமாண்டர் சம்பத் முனசிங்க என்பவர் 11 பேரின் கடத்தலில் சம்பந்தப்பட்டிருந்ததாகவும் இது தொடர்பில் கரணாகொட அறிந்திருந்ததாகவும் ஏற்கனவே நீதிமன்றத்தில் சீஐடியினர் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹஜ் யாத்திரை தொடர்பான தீர்க்கமான தீர்மானம் இன்று

wpengine

தென்னாபிரிக்காவுடனான தொடரில் மேத்யூஸ் இனது திட்டத்தில் மாற்றம்..

wpengine

தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபருக்கும் இடையில் சந்திப்பு…

wpengine