Top Story 3உள்நாட்டு செய்திகள்

கடந்த 24 மணித்தியாலயத்தில் 72 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலயத்தில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 72பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியினை தவிர்த்து செயற்பட்ட குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் கடந்த 30 ஆம் திகதி முதல் இதுவரை 660 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

சிலாபம் நகர சபைக்கான தலைமை தெரிவு பிற்போடல்…

wpengine

இணக்க சபைகளில் நிலவும் வெற்றிடங்களை விரைவில் நிரப்ப அரசு நடவடிக்கை

wpengine

கோட்டாவின் மிரிஹான வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு

wpengine