Top Story 2உள்நாட்டு செய்திகள்

கடந்த 24 மணித்தியாலத்தில் 5,989 பேருக்கு தடுப்பூசி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கடந்த 11 நாட்களில் 1 இலட்சத்து 67 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் சீரம் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட 5 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் கடந்த ஜனவரி 28 ஆம் திகதி நன்கொடையாக நாட்டுக்கு வழங்கப்பட்டிருந்தன.

இதற்கமைய, நேற்று(08) மாத்திரம் நாடளாவிய ரீதியில் 5,989 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 67 ஆயிரத்து 762 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் முன்னின்று செயற்பட்ட தரப்பினருக்கே தற்போது கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றது.

அத்துடன், முதலாவது தடுப்பூசி வழங்கப்பட்டு மூன்று வாரங்களில் இரண்டாவது தடுப்பூசி வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இம்மாத இறுதியில் 16 இலட்சம் தடுப்பூசிகள்

wpengine

மத்தியவங்கி பிணை முறியுடன் பிரதமருக்கு நேரடித் தொடர்பு – ஜே.வி.பி பகிரங்க குற்றச்சாட்டு..

wpengine

அரச அதிகாரிகளுக்கு தேர்தல் குறித்து தெளிவூட்டும் நடவடிக்கை முன்னெடுப்பு

wpengine