உள்நாட்டு செய்திகள்

கடந்த 24 மணித்தியாலத்தில் 528 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கடந்த 24 மணித்தியாலத்தில் ஊரடங்கு சட்டத்தினை மீறிய 528 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் 150 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கடந்த 20 ஆம் திகதி ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட நிலையில், இன்று வரையான கால பகுதியில் 61,621 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் 17,322 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனிடையே ஊரடங்கு சட்டத்தினை மீறிய 18,496 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 6,991 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

வறட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 60 மில்லியன் ரூபா நிதி உதவி…

wpengine

UGC தற்காலிகமாக மூடப்பட்டது

wpengine

ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில்..!

wpengine