Top Story 3உள்நாட்டு செய்திகள்

கடந்த 24 மணித்தியாலத்தில் 103 நிறுவனங்கள் சிக்கலில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலயங்களுக்குள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முகக்கவசம் அணியாமை, சமூக இடைவௌியை கடைபிடிக்காமை தொடர்பில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதன்படி, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 30ம் திகதி முதல் இதுவரையில் 2,680 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் மேல் மாகாணத்தினுள் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் உரிய சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய செயற்படாத 103 அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இனங்காணப்பட்டுள்ளன.

குறித்த காலப்பகுதியில் 910 நிறுவனங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாள் தெரிவித்தார்.

Related posts

விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அமைச்சின் செயலாளராக நவவி நியமனம்

wpengine

‘கள் – எலியா மகளிர் அரபிக் கல்லூரி நிர்வாகத்தினரே துரோகம் செய்யாதீர்கள்’ – நலன்விரும்பியின் வேண்டுகோள்!

wpengine

யாழ் பல்கலைக்கழக மோதல் விவகாரம் – வழக்குகளை வாபஸ்பெற முடிவு.

wpengine