உள்நாட்டு செய்திகள்

கஞ்சிபான இம்ரானின் நெருங்கிய உதவியாளர் கைது…



(FastNews – Colombo) பாதாள உலக குழுத் தலைவன் மாகந்துரே மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள குழு உறுப்பினர் கஞ்சிபான இம்ரானின் நெருங்கிய உதவியாளர் ஒருவர் கொலன்னாவ – சாலமுல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்றிரவு அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொலன்னாவ பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய மொஹமட் நவ்பர் மொஹமட் அலி என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் இன்று அவர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.

அவரிடமிருந்து 10 கிராமும் 480 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ராஜபக்ஷர்களை பாதுகாப்பதற்கே அவசரகால சட்டம்!

wpengine

தெரிவுக்குழு முன்னிலையில், முன்னாள் காவற்துறைமா அதிபர் என். கே இலங்ககோன் சாட்சியம்

wpengine

ரஞ்சன் ராமநாயக்க கைது

wpengine