உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

ஓய்வை அடுத்து 166 ஓட்டங்கள் விளாசிய சங்கக்கார அதிரடி வீடியோ



இங்கிலாந்தில் நடக்கும் றொயல் லண்டன்(Royal London) ஒருநாள் கிண்ணத்தின் 2வது அரையிறுதி போட்டியில் சர்ரே அணி, நாட்டிங்காம்ஷைர் அணியுடன் மோதியது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய சர்ரே அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 300 ஓட்டங்கள் குவித்தது.

இதில் அதிரடியாக விளையாடிய குமார் சங்கக்காரா 138 பந்தில் 166 ஓட்டங்கள் (13 பவுண்டரி, 1 சிக்சர்) அடித்து அசத்தினார்.

இவர் சமீபத்தில் முடிந்த இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடைபெற்றார்.

இந்நிலையில் தனது ஓய்வுக்கு பின்னரும் அதிரடி ஆட்டத்தை இங்கிலாந்தில் தொடர்ந்து வருகிறார்.

கடின இலக்கை நோக்கி களமிறங்கிய நாட்டிங்காம்ஷைர் வெற்றி இலக்குக்கு மிக அருகில் வந்தது. இருப்பினும் 50 ஓவர்களில் அந்த அணியால் 7 விக்கெட்டுக்கு 296 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதனால் சர்ரே அணி 4 ஓட்டங்களால் ‘திரில்’ வெற்றி பெற்றது. நாட்டிங்காம்ஷைர் அணியில் அதிகபட்சமாக கிரேக் சுமித் (124) சதம் அடித்தார். 166 ஓட்டங்கள் அடித்த சங்கக்காரா ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=03EiHvtuFm8″ width=”560″ height=”315″]

(riz)

 

Related posts

பிரதமர் ரணில் விக்கரமசிங்க கார்தினல் ரஞ்சித் மெல்கம் ஆண்டகையினை சந்தித்து கலந்துரையாடல்..

wpengine

275,000 இன்சுலின் மருந்து இறக்குமதி..!

wpengine

பேராதெனிய பல்கலைகழகத்தின் அனைத்து பீடங்களும் தற்காலிகமாக மூடப்பட்டது…

wpengine