உள்நாட்டு செய்திகள்

ஓய்வூதிய கொடுப்பனவு சட்டமூலம் மீளவும் திருத்தத்திற்கு..


ஓய்வூதிய கொடுப்பனவு தொடர்பான சட்டமூலத்தை மீண்டும் திருத்தியமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  அரச நிர்வாக அமைச்சு  தெரிவித்துள்ளது.

குறித்த இந்நடவடிக்கையின் ஆரம்ப கட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, ஓய்வூதியத் திணைக்களம், நிதி அமைச்சு, கொடுப்பனவுகள் மற்றும் மதிப்பீட்டு திணைக்களம் ஆகியவற்றுடன் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் தயார் செய்யப்பட்ட ஓய்வூதிய கொடுப்பனவு தொடர்பான சட்டமூலத்திற்கு பல ஆட்சேபனைகள் தெரிவித்தமை காரணமாக அதனை மீள திருத்தியமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

Related posts

2005 முதல் அரசியல் கொலைகளை செய்தவர்கள் யார்? சிறையிலிருந்து சுரேஸ் சாலேக்கு பிள்ளையான் தெரிவித்த செய்தி என்ன? ஆசாத் மௌலான தெரிவித்துள்ள புதிய தகவல்கள்..!

wpengine

வடமாகாண தீவக மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கிய இந்தியா

wpengine

அடையாள அட்டை விண்ணப்பங்களை ஏற்கும் கால எல்லை நீடிப்பு

wpengine