உள்நாட்டு செய்திகள்

ஓய்வூதியம் பதிவு செய்வதற்கான கால எல்லை 31 ஆம் திகதியுடன் நிறைவு…


விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியம் கொடுப்பனவு முறையின் கீழ், மீள பதிவு செய்வதற்காக வழங்கப்பட்டுள்ள கால எல்லை எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுவரையில் மூன்று இலட்சத்து 80 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளதாக ஓய்வூதிய கொடுப்பனவு பணிப்பாளர் நாயகம் ஜகத் டயஸ் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது ஓய்வூதியம் பெறும் அரச சேவையாளர்கள் இதற்காக மீள பதிவு செய்ய வேண்டியதில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அரச சேவையில் இருப்போர் மாத்திரமே பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். விதவைகள் உள்ளிட்டோர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு முறைமைகளை முறையாக முன்னெடுக்கும் பொருட்டு இணையத்தள தரவு கட்டமைப்பு ஒன்றை அமைப்பதே இதன் நோக்கமாகும்.

இதற்காகவே இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஓய்வூதிய கொடுப்பனவு ஆணையாளர் நாயகம் ஜகத் டயஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டுமாறு வேண்டுகோள்

wpengine

Sputnik V செவ்வாயன்று தாயகத்திற்கு

wpengine

தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்பில் இன்று பேச்சுவார்த்தை

wpengine