உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

ஓய்வு எண்ணம் எனக்கு இல்லை – அப்ரிடி திட்டவட்டம்..



வழியனுப்பும் வகையிலான போட்டிக்காக நான் யாரையும் கேட்கவில்லை என்று பாகிஸ்தான் அணியின் சகலதிறை வீரர் 36 வயதான அப்ரிடி கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது:

பிரிவு உபசார போட்டியில் விளையாட வாய்ப்பு தரும்படி பாகிஸ்தான் கிரிக்கெட் சபையை சகலதுறை வீரர் அப்ரிடி வலியுறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள அப்ரிடி, ‘பாகிஸ்தான் அணிக்காக 20 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறேனே தவிர, பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்காக அல்ல. வழியனுப்பும் வகையிலான போட்டிக்காக நான் யாரையும் கேட்கவில்லை.

ரசிகர்களின் அன்பும், ஆதரவுமே எனக்கு கிடைத்த உன்னதமான பரிசாகும். எனது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டதாக நினைக்கவில்லை. கிரிக்கெட் ஆடுவதில் இன்னும் உற்சாகமாகவே இருக்கிறேன். தொடர்ந்து சர்வதேச போட்டியில் ஆடுவேன். எனக்கு வாய்ப்பு அளிப்பது தேர்வு குழுவின் முடிவை பொறுத்தது’ என்றார்.

Related posts

கிரிஷாந்த புஷ்பகுமார பதவி இராஜினாமா…

wpengine

தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ள பகுதிகள்

wpengine

அஜித் மான்னப்பெருமவின் பதவியில் மாற்றம்…

wpengine