உலக செய்திகள்

ஓமான் நாட்டின் அரசர் காலமானார்



(ஃபாஸ்ட் நியூஸ் | ஓமான் ) – ஓமான் நாட்டின் அரசர் சுல்தான் காபூஸ் பின் சைத் அல் சைத் தனது 79 ஆவது வயதில் காலமாகியுள்ளதாக ஓமான் அரசு தெரிவித்துள்ளது.

புற்றுநோய்க்கு ஜெர்மனியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (10) அவர் காலமாகியுள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளில் மிக நீண்டகாலமாக ஆட்சி செய்த சுல்தான். அவரது ஆட்சி காலத்தில் ஓமான் நாட்டை வறுமையிலிருந்து மீட்டெடுத்தார்.

எண்ணெய் வளத்தை வைத்து தனது நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்று சாலைகள், துறைமுகங்கள், பல்கலைக்கழகங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தினார்.

இவர் தனது 29 ஆவது வயதில் ஆட்சிக்கு வந்தார். இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. இவருக்கு அடுத்த அரசர் யார் என்பதையும் இவர் அறிவிக்கவில்லை.

இந்த நிலையில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த இவர் நேற்றைய தினம் காலமானார். இவரது இறப்பை ஓமான் நாட்டு அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

Related posts

இரகசியமாக மூன்று பதவிகளை வகித்த முன்னாள் பிரதமர் – புதிய சர்ச்சை

wpengine

பாடசாலை கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் 10 பேர் உயிரிழப்பு…

wpengine

காசா பகுதியில் உள்ள வீடுகளுக்கு தீ வைத்து அக்கிரமம் செய்யும் இஸ்ரேலிய இராணுவம்..!

wpengine