உள்நாட்டு செய்திகள்

ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்காக ஸ்ரீ.சு.கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம் கூடுகிறது..


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழு கூட்டமானது வெகுவிரைவில் இடம்பெறும் என அக்கட்சியினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் 65வது ஆண்டு நிறைவு விழா தொடர்பில் கலந்துரையாடுவதற்காக குறித்த கூட்டம் இடம்பெறும் என கட்சி வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

கட்சியின் ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொள்ளாத கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள ஒழுக்காற்று நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது தீர்க்கமான தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் மத்திய குழு கூடவுள்ள தினம் தொடர்பில் கட்சியின் உயர்மட்டம் தகவல்களை வெளிப்படுத்தப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

மைத்திரியின் சுடலை ஞானம் பற்றி மஹிந்த

wpengine

பேரீத்தம் பழத்திற்கான வரி குறைப்பு

Azeem Kilabdeen

வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் ஈரான் பிரஜை ஒருவர் கைது…

wpengine