உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஒரே நேரத்தில் நாட்டிலிருந்து வெளியேறிய ரணில் மற்றும் மஹிந்த..



பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆகியோர் இன்று அதிகாலை சிங்கப்பூர், மலேசியா நோக்கி புறப்பட்டு சென்றுள்ளனர்.

இன்று அதிகாலை 1.10 மணியளவில் சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட குழுவினர் பயணத்தை மேற்கொண்டதாக விமான நிலைய தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதேநேரம் இன்று அதிகாலை 1.10 மணியளவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உட்பட 6 பேர் கொண்ட குழுவொன்று ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றில் மலேசியா நோக்கி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதியுடன் லொஹான் ரத்வத்தே மற்றும் ஜோஸ்டன் பெர்னாண்டோ ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான தகவலை அறிவித்த லிட்ரோ!

wpengine

காலி சிறைச்சாலையில் மோதல்

Azeem Kilabdeen

கட்டார் நாட்டின் அமீர் இலங்கை விஜயம்…

wpengine