ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஒரே இரவில் தாம் 3000 வரையிலான இராணுவ வீரர்களை கொன்றொழித்தோம் – முன்னாள் பிரதி அமைச்சர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஒரே இரவில் தாம் இரண்டாயிரம் முதல் மூவாயிரம் வரையிலான இராணுவ வீரர்களை கொன்றொழித்துள்ளதாக முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் எனப்படும் வினாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஆனையிறவு பகுதியில் வைத்து ஒரே இரவில் இவ்வாறு இராணுவப் படைவீரர்களை கொன்றொழித்ததாகத் தெரிவித்த இவரது கருத்தானது பெரும் சர்ச்சையுடன் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றிற்கு வருமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்த கோரிக்கையை தாம் நிராகரித்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

கருணா அம்மான் கொரோனா வைரஸ் தொற்றை விடவும் அபாயமானவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசியப் பட்டியல் ஊடாக தெரிவாவதனை விடவும் தாம் மக்களின் ஆணையின் அடிப்படையில் பாராளுமன்றம் செல்லவே விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வயிற்றில் 8 கிலோ சதைப் பிண்டம்

wpengine

மஹிந்த மற்றும் பசிலின் பயணத்தடை நீடிப்பு

News Editor

நேர்முகப் பரீட்சை நடத்தும் நவீன ரோபோ…

wpengine