உள்நாட்டு செய்திகள்

ஒரு வருட காலத்திற்குள் 3 முறைக்கு மேலாக வெளிநாடு செல்லக் கூடாது – பிரதமர்..



வெளிநாட்டுப் பயணத்தில் ஒரு வருட காலத்திற்குள் மூன்று முறைக்கு மேலாக ஈடுபடக் கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்தல் விடுத்துள்ளார்.

இதன் பிறகு, கட்சியைச் சேர்ந்த யாராவது வெளிநாட்டுப் பயணத்தில் ஈடுபடுவதாக இருந்தால், தன்னிடம் எழுத்து மூலம் அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் மக்கள் பிரதிநிதி எப்பொழுதும், கட்சி ஆதரவாளர்களினதும், பொது மக்களினதும் தேவைகளை இனங்கண்டு நிறைவு செய்பவர்களாக இருக்க வேண்டும் எனவும் பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார்.

குழுக்களுக்கு பெயரிடப்பட்டுள்ளவர்கள் கட்டாயமாக அக்குழுக் கூட்டங்களுக்கு சமூகமளிக்க வேண்டும். சபைகளுக்கு பொறுப்பாக உள்ளவர்கள் அச்சபைக் கூட்டங்களில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்.

கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்துக்கு அதில் அங்கம் வகிக்கும் ஒருவர் மூன்று கூட்டங்களுக்கு சமூகமளிக்காது போனால், அவர் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்படுவார் எனவும் பிரதமர் அவ்வறிவித்தலில் குறிப்பிட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

 

(rizmira)

Related posts

இன்று முதல் 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தம்…

wpengine

அங்கொட லொக்காவின் நெருங்கிய உதவியாளர் கைது

wpengine

மஹிந்த ஒரு பொய்யன் :கபீர் ஹாசீம்

wpengine