ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஒரு மாதச் சம்பளத்தை அன்பளிப்பாக கொடுத்த அமைச்சர்



பெருந்தெருக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தனது ஒரு மாதச் சம்பளத்தை அனர்த்த முகாமைத்துவ நிதியத்திற்கு அன்பளிப்புச் செய்துள்ளார்.

தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழை காரணமாக ஏற்பட்டுள்ள மண்சரிவு மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் அனர்த்த முகாமைத்துவ சேவைகள் அமைச்சு நிதியமொன்றை ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில் குறித்த அனர்த்த முகாமைத்துவ நிதியத்திற்கு பெருந்தெருக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தனது ஒருமாதச் சம்பளத்தை அன்பளிப்புச் செய்துள்ளார்.

மேலும், எதிர்வரும் ஜுன் மாதத்திற்கான தனது சம்பளத்தை குறித்த நிதியத்தில் வைப்பிலிட நடவடிக்கை எடுக்குமாறு அவர் தனது அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் பணிப்புரை விடுத்துள்ளார்.

Related posts

தல ரசிகர்களுக்கு விவேக், சிம்பு கூறிய அறிவுரை

wpengine

ஆடைகளைக் களைந்து ஆர்ப்பாட்டம் நடத்தி உரிமை பிரச்சினையை எழுப்பிய பெண்கள்

wpengine

அவுஸ்திரேலிய அணியுடன் இன்று(15) மோதும் இலங்கை அணியின் 11 வீரர்கள் இதோ

wpengine