உள்நாட்டு செய்திகள்

ஒரு தொகை வௌிநாட்டு தயாரிப்பு சிகரட்டுகளுடன் ஒருவர் கைது…


ஒரு தொகை வௌிநாட்டு தயாரிப்பு சிகரட்டுக்களை இலங்கைக்கு கொண்டு வந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன கூறியுள்ளார்.

சுமார் 1,650,000 ரூபா பெறுமதியுடைய 150 பெட்டிகளில் பொதி செய்யப்பட்ட 30,000 வௌிநாட்டு சிகரட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

வாழைத்தோட்டம் துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் ரய்னா கைது…

wpengine

அரசியலமைப்புச் சபை எதிர்வரும் வியாழனன்று கூடுகிறது..

wpengine

14 ஆம் திகதி நள்ளிரவுடன் பிரசார நடவடிக்கைகளுக்குத் தடை

wpengine