உள்நாட்டு செய்திகள்

ஒரு தொகை கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது



(FASTNEWS|COLOMBO) கம்பஹா – மஹர – றோயல் காட்ஸ் பிரதேசத்தில் ஒரு தொகை கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திட்டமிட்ட குற்றத் தடுப்புப் பிரிவுக்கு கிடைக்கபெற்ற தகவலின்படி மேற்கொள்ளபப்ட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

இதன்போது கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரிடமிருந்து 20 கிலோ 362 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு 14, நாகலகம்வீதிய பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Related posts

வஸீம் கொலையாளிகளுக்கு அரச உயர்மட்ட அனுசரணை?

wpengine

இலங்கை கிரிக்கெட் சபையின் முன்னாள் செயலாளர் நிஷாந்தவுக்கு பிணை..

wpengine

குழு அறிக்கை கையளிப்பு

wpengine