உள்நாட்டு செய்திகள்

ஒரு கோடிக்கும் அதிக வெளிநாட்டு நாணயத் தாள்களுடன் இருவர் கைது..


ஒரு கோடியே 77,13,793 ரூபா பணத்தை சட்டவிரோதமாக சீனாவுக்கு எடுத்துச்செல்ல முற்பட்ட வேளை, இலங்கை பிரஜைகள் இருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அக்குரணை மற்றும் பாமன்கடை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களிடமிருந்து அமெரிக்க டொலர், ஹொங்கொங் டொலர், இந்திய ரூபா மற்றும் இலங்கை நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் சுங்கப்பிரிவினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பிரதி சுங்க பணிப்பாளர் விபுல மினுவன்பிடிய தெரிவித்துள்ளார்.

Related posts

அமைச்சர் றிஷாட் பதியுதீன் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிறுவனத்தின் (யுனிடோ) பிராந்தியப் பிரதிநிதி சந்திப்பு

wpengine

நாட்டு நிலைமை குறித்து இராணுவத் தளபதி விசேட உரை

wpengine

சுவர்ணமஹால் பினான்ஸ் முதலீட்டாளர்களது நூற்றுக்கு 10% இனை வழங்க தீர்மானம்…

wpengine