வணிகம்

உள்நாட்டு பெரிய வெங்காயம் 1Kg இனை 80 ரூபாவுக்கு கொள்வனவு செய்யுமாறு பணிப்புரை..


உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தை 80 ரூபாவுக்கு கொள்வனவு செய்யுமாறு வாழ்க்கைச் செலவின குழு சதொசவுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐயாயிரத்து 200 ஹெக்டெயர் நிலப்பரப்பில் பெரிய வெங்காயத்தை பயிரிடத் திட்டமிட்டிருந்தாலும், ஆயிரத்து 500 ஹெக்டெயர் விஸ்தீரனமான நிலப்பரப்பில் மாத்திரமே பெரிய வெங்காயம் பயிரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இம்முறை பெரிய வெங்காயச் செய்கை 50 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது. தற்போது நிலவும் வறட்சியுடன் கூடிய காலநிலை இதற்கான காரணம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

பாஸ்மதி இறக்குமதிக்கு அனுமதி

wpengine

சமையல் எரிவாயு விலையில் மாற்றம்

wpengine

ஜனாதிபதி தலைமையில் சேமிப்பு “NSB i Saver” அறிமுகம்..

wpengine