உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

ஒருநாள் அரங்கில் அதிக வெற்றிகள் பெற்ற அணி வரிசையில் இலங்கை அணிக்கு எவ்விடம்..?


சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிக போட்டிகள் விளையாடிய அணிகளில் இலங்கை அணி ஏழாவது இடத்தினை பெற்றுள்ளது. இதில் 900 போட்டிகள் பங்கேற்று இந்திய அணி முதல் இடத்தில் உள்ளது.

என்ன தான் இந்திய அணி முன்னிலையில் இருந்தாலும் வெற்றி அணிகளுக்கான பட்டியலில் இந்திய அணி சற்று பின்னடைவே சந்தித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக அதிக போட்டிகள் விளையாடிய அவுஸ்திரேலியா அணியே முதல் இடத்தில் உள்ளது.

இந்த அணி 888 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 547 வெற்றிகளை குவித்துள்ளது. இந்த அணியின் சராசரி வெற்றி 64.42 ஆகும். தென் ஆப்பிரிக்க அணி (564 போட்டி 348 வெற்றி, 64.05 ) இரண்டாவது இடத்திலும், பாகிஸ்தான் அணி (866 போட்டி, 457 வெற்றி, 54.36) 3-வது இடத்திலும், இந்திய அணி (900 போட்டி, 455 வெற்றி, 53.25) 4 வது இடத்தில் உள்ளது.

ஐந்தாவது இடத்தில் மேற்கிந்திய தீவு அணியும், ஆறாவது இடத்தில் இங்கிலாந்து அணியும், ஏழாவது இடத்தில் 777 போட்டிகள் விளையாடியுள்ள இலங்கை அணி 365 வெற்றிகள், 373 தோல்விகள், 5 போட்டிகள் டிராவிலும், 34 போட்டிகள் முடிவில்லாமலும் போயுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வசீம் தாஜூதீனின் மரணம் : வாக்குமூலம் வழங்க வந்தவர் மீது தாக்குதல்

wpengine

எரிவாயு விநியோகம் தடையின்றி தொடரும்

wpengine

கிரிக்கெட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் துடுப்புகளின் அளவை மட்டுப்படுத்த MCC ஆலோசனை

wpengine