ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஒருதலைக் காதலைக் கூற சன நெரிசலில் கேகாலை பாடசாலை மாணவியிடமிருந்து சப்பாத்தால் அறை..



கேகாலை பகுதியில் உயர்தர வகுப்பு மாணவியொருவரிடம் தனது காதலை கூற சென்ற 23 வயது நபரொருவர் அந்த மாணவியின் சப்பாத்தால் அடி வாங்கிய சம்பமொன்று நேற்று(20) பதிவாகியுள்ளது.

அடிக்கடி தான் பயணிக்கும் பஸ்ஸில் அந்த மாணவியை காணும் குறித்த நபர் அந்த மாணவி மீது ஒரு தலை காதலை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

இதன்படி நேற்றைய தினம் அந்த மாணவி பாடசாலை முடிந்து வரும் வழியில் மாணவியை சந்தித்து தனது காதலை கூறி மாணவியின் தொலைபேசி இலக்கத்தை கேட்டுள்ளார்.

இதன்போது பதிலெதுவும் வழங்காது தனது காலில் இருந்த சப்பாத்து ஒன்றை கழற்றி அந்த நபரின் கன்னத்தில் பளார் என அடித்துள்ளார். இதன்போது அந்த இடத்தில் பொதுமக்கள் பலர் இருந்துள்ளனர். இதனை தொடர்ந்து வெட்கம் தாங்க முடியாது அந்த நபர் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

(rizmira)

Related posts

இனியாவது முஸ்லிம் சடலங்களை ஓட்டமாவடிக்கு அனுப்புவதை நிறுத்துங்கள்

wpengine

தமிழ் மாணவரை டிக்கட் புத்தகத்தால் தாக்கும் நடத்துனர்

wpengine

என்னைக் கைது செய்ய வந்தவர் என்னை விடவும் ஓர் திருடர்!- நாமல்

wpengine