உலக செய்திகள்

ஒபாமா கியூபா செல்லவுள்ளார்



அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா எதிர்வரும் மார்ச் மாதம் 21,22 திகதிகளில் கியூபா பயணம் மேற்கொள்வார் என அமெரிக்காவின் ஏபிசி நியூஸ் தொலைக்காட்சி தகவல் வெளியிட்டுள்ளது.

கம்யூனிஸ நாடான கியூபா மீது விதித்திருந்த பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா அண்மையில் விலக்கிக் கொண்டது.

நீண்ட கால விரோதத்துக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே சுமுகமான உறவு ஏற்பட தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், கியூபாவுக்கு ஒபாமா செல்வார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

கியூபாவுக்கு ஒபாமா பயணம் செய்வாரானால், கடந்த 80 ஆண்டுகளில் அந்நாட்டுக்குச் செல்லும் முதல் அமெரிக்க ஜனாதிபதி என்ற சிறப்பைப் பெறுவார்.

ஆயினும், இந்தச் செய்தியை உறுதி செய்யும் விதமாக, அதிகாரபூர்வ அறிவிப்பை அதிபர் மாளிகை வெளியிடவில்லை.

Related posts

‘ரான்சம்வேர்’ வைரஸை தொடர்ந்து ‘UIWIK’ என்ற மற்றொரு வைரஸ் தாக்குதல் குறித்து எச்சரிக்கை..

wpengine

அவதூறு வழக்கில் ஜொனி டெப்புக்கு ஆதரவாக தீர்ப்பு : முன்னாள் மனைவி ஆம்பர் ஹேர்ட்டுக்கு அபராதம்

wpengine

காவல்துறை தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி…

wpengine