உள்நாட்டு செய்திகள்

ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறுவருக்கு பிடியாணை..



ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர், பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட ஆறுபேருக்கு, பூகொடை நீதவான் நீதிமன்றத்தால் நேற்று(18) பிடியாணை பிறப்பிக்கப் பட்டுள்ளது.

கொழும்பு நகர சபையின் ஊடாக, கொழும்பு நகரத்தில் சேகரிக்கப்படுகின்ற குப்பைகளை, கிரிந்திவெல மாளிகாவத்த குப்பை முகாமைத்துவ மத்திய நிலையங்களுக்கு, குப்பை லொறிகள் மூலமாக எடுத்து சென்ற போது, அவற்றுக்கு இடையூறு விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழே, அறுவருக்கும் இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த இந்த விவகாரம் தொடர்பிலான வழக்கு, பூகொடை நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகின்றது. வழக்கு விசாரணையில் ஆஜராகாமையை அடுத்தே, அந்த அறுவருக்கும் பிடியாணை பிறப்பிக்குமாறும், அவர்கள் அறுவருக்கு பிணை வழங்கிய பிணையாளர்கள் அறுவரையும் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பி வைக்குமாறு, பூகொடை நீதிமன்ற நீதவான் நிலுபுலி லங்காபுர கட்டளையிட்டுள்ளார்.

 

(rizmira)

Related posts

திருமண வயதெல்லை 16 இலும் குறைவென்ற விடயத்திற்கு உடன்பாடில்லை.

wpengine

ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு தொழில்

wpengine

பசிலுக்கு எதிரான வெளிநாட்டு பயணத் தடை நீக்கம்

wpengine