ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஐ.பி.எல் போட்டிகளுக்கு இலங்கை தயார்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ள இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளை நடத்த இலங்கை தயாராக இருப்பதாக இலங்கை கிரிக்கெட் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் மே 3 ஆம் திகதி வரை இந்தியா நாடு தழுவிய ஊரடங்குச்சட்டதை அறிவித்த பின்னர், இந்திய கிரிக்கெட் வாரியம் ஐ.பி.எல் போட்டிகளை ஒத்திவைத்தது.

இதேவேளை, அடுத்த சில நாட்களில் இலங்கையில் கொவிட் 19 அச்சுறுத்தல் தளர்ந்தால் இலங்கையின் வேண்டுகோளை இந்தியா ஆராயும் என ஊடகங்களுக்கு இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் “ஐ.பி.எல் போட்டிகள் நிறுத்தப்பட்டால், இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐ.பி.எல் பங்குதாரர்களுக்கு சுமார் 500 மில்லியனுக்கும் அதிகமான இழப்பைச் சந்திக்க வேண்டியிருக்கும். எனவே, 2009யில் தென்னாப்பிரிக்காவில் போட்டிகளை நடத்தியது போன்று தற்போது வேறொரு நாட்டில் நடத்தினால் அவர்களுக்கு நன்மை பயக்கும்.

அவர்கள் தங்களின் இந்த முன்மொழிவுக்கு இனங்குவர்களாக இருந்தால், தேவையான அனைத்து வசதிகளையும் வழங்க நாங்கள் தயாராக உள்ளோம் என தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கையில் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறுமாக இருந்தால், அது நாட்டிற்கும் இலங்கை எஸ்.எல்.சி.க்கும் அதிக வருமானத்தை கொண்டு வரும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஐஸ்கிரீமை எவ்வாறு சாப்பிட வேண்டும் – பெண்களுக்கு பாடம்…

wpengine

மகனே உனக்காக நான் ஐந்து நேர தொழுகையில் துஆ செய்கிறேன்

wpengine

தீர்ப்பு வழங்கிய அதிர்ச்சியில் நீதிமன்றில் மயங்கி விழுந்த பெண்!

wpengine