உலக செய்திகள்

ஐ.நா பொது சபையின் முன்னாள் தலைவரான ஜான் ஆஷ் மரணம்



அமெரிக்காவில், தன் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்களை சந்தித்து வந்த ஐ.நா பொது சபையின் முன்னாள் தலைவரான ஜான் ஆஷ் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

61 வயதாகும் ஜான் ஆஷ், ஆண்டி குவா மற்றும் பார்புடாவின் ஐ.நா தூதராக பணியாற்றியுள்ளார்.

ஜான் ஆஷ் மாரடைப்பினால் பாதிக்கப்பட்டதாக அவரது வழக்கறிஞர் ஊடகங்களுக்கு தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 2014 வரை, ஓராண்டுக்கு ஐ.நா பொது சபையின் தலைவராக ஜான் ஆஷ் செயல்பட்டார்.

சீன வர்த்தகர்களிடமிருந்து 1.3 மில்லியன் டாலர் லஞ்சம் பெற்றதாகவும், சீன வர்த்தகர்களின் நலன்களை முன்னெடுக்க தனது பதவியை பயன்படுத்தியதாகவும் எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஒக்டோபரில் ஒரு சிறப்பு நீதிமன்றத்தால், ஜான் ஆஷின் கண்டனத்துக்குள்ளானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

குழந்தைகள் தொழிற்சாலை முற்றுகை – இளம் பெண்கள் மீட்பு [VIDEO]

wpengine

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து இரத்து

wpengine

வாஷிங்டன் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

wpengine