ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஐ.தே.க மற்றும் ஸ்ரீ.பொ.மு முக்கியஸ்தர்கள் சிலர் கைது?; ஜனாதிபதியின் அதிரடி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதான அரசியல் முக்கியஸ்தர்கள் சிலர் எதிர்வரும் வாரங்களில் கைது செய்யப்படலாம் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்திற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் அதி முக்கிய புள்ளிகள் சிலரும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தர்கள் சிலரும் கைது செய்யப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தீர்மானங்களை உண்மையாக்கும் வகையில் தாமரை கோபுரம் ஊழல் மோசடிகள் விவகாரத்தை அம்பலப்படுத்தியிருந்தார் ஜனாதிபதி.

இதன் மூலம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தரப்பினருக்கு எதிராக ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க மாட்டார் என்பதனை பொய்ப்பித்து போனது.

மேலும், கைது செய்வதற்கு தேவையான சகலவிதமான சட்ட ஆவணங்களையும் ஜனாதிபதி தனது வசம் வைத்திருப்பதாகவும், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்பார் எனவும் சிங்கள இணைய தளமொன்று ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி எதிர்வு கூறியுள்ளது.

Related posts

முஸ்லிம்களது நலன் கருதியே சிறையில் ‘ஜம்பர்’ அணிந்தேன்.. – மறுத்திருந்தால் விளைவுகளை சந்திக்க நேரிட்டிருக்கும்…

wpengine

கல்யாணம் வேண்டாம்… நம்பிக்கை இல்லை…

wpengine

ரகசிய திருமணம் செய்த நயன்தாரா

wpengine