ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஐ.தே.க தலைமை புதிய நபருக்கு; புதிய கூட்டணியில் சஜித்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின் போது ஜனநாயக தேசிய முன்னணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமை தாங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கான பொறுப்பை வழங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையை ஏற்கும் சாத்தியங்கள் இருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

கட்சித் தலைமைத்துவம் தொடர்பில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக புதிய கூட்டணி ஒன்றை அமைக்கும் முயற்சியில் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மிஷ்கின் இயக்கத்தில் விஷால்?

wpengine

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பிரித்தானிய பிரஜைகளுக்கு சிவப்பு எச்சரிக்கை..

wpengine

சங்காவின் ஜனாதிபதி வேட்பாளர் வாய்ப்பு குறித்து மஹேல அங்கலாய்ப்பு…

wpengine