உள்நாட்டு செய்திகள்

ஐ.தே.கட்சியுடன் நேரடி கலந்துரையாடல் ஒன்றினை ஏற்படுத்தி தருமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள்…



உத்தேச அரசியலமைப்புச் சட்டத்தில் காணப்படும் கருத்து முரண்பாட்டுக்கான விடயங்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுடன் நேரடி கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்து தருமாறு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அரசியலமைப்பு தொடர்பான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசனைக் குழுவாக நியமிக்கப்பட்ட அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான குழு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

ஸ்ரீ ல.சு.க.யின் நிலைப்பாட்டை தெளிவாக முன்வைத்து, அது தொடர்பில் ஐ.தே.க.யின் கருத்தை தெரிந்து கொள்வது இந்த நேரடி கலந்துரையாடலின் நோக்கம் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

 

(rizmira)

Related posts

ரிஷாட் பதியுதீனின் மனுக்கள் 15 இல் பரிசீலனைக்கு

wpengine

ஜனாதிபதிக்கு எதிரான இலஞ்ச முறைப்பாடு..

wpengine

வேலைவாய்ப்பு பணியக தலைமை அலுவலகத்திற்கு பூட்டு

wpengine