உள்நாட்டு செய்திகள்

ஐ.எஸ் பயங்கரவாதிகளின் நகர்வுகள் இந்து சமுத்திர பரப்பில் இருப்பதாக பாதுகாப்பு தரப்பு எச்சரிக்கை..


ஐ.எஸ் பயங்கரவாதிகளின் ஊடுருவலும் பயங்கரவாத நகர்வுகளும் இந்து சமுத்திர பரப்பில் இருப்பதாகவும் இலங்கையிலும் பயங்கரவாத நகர்வுகளுக்கு வாய்ப்புகள் இருப்பதாக நம்புவதாகவும் பாகிஸ்தான் மற்றும் இந்திய பாதுகாப்பு தரப்பு குறிப்பிட்டுள்ளது.

ஆசிய நாடுகளுக்கு இது பாரிய அச்சுறுத்தலாக மாறிவருவதாகவும் எச்சரித்துள்ளனர். ஐ.எஸ் இஸ்லாமிய பயங்கரவாத நகர்வுகளை கட்டுப்படுத்த இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயற்படுவதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் நடைபெற்ற சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்கும் வகையில் இலங்கைக்கு வருகை தந்திருந்த பாகிஸ்தானிய கடற்படை தளபதி இலங்கையில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கியிருந்த செவ்வியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

Related posts

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

wpengine

50 மெட்ரிக் தொன் பேரீச்சம்பழங்கள் சவுதி நன்கொடை

Azeem Kilabdeen

கொழும்பில் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு

wpengine