உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

ஐ.எஸ். தீவிரவாதிகளின் கொலைவெறி தாக்குதலுக்கு சதி திட்டம் வகுத்த தலைவன் பலி



பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் பகுதிகளில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கொலைவெறி தாக்குதலுக்கு சதி திட்டம் வகுத்து தந்த தலைவன் ஹபிஸ் சயீத் அமெரிக்க விமானப்படை தாக்குதலில் பலியானதாக தெரியவந்துள்ளது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் பகுதிகளில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கொலைவெறி தாக்குதலுக்கு சதி திட்டம் வகுத்து தந்த தலைவன் ஹபிஸ் சயீத் அமெரிக்க விமானப்படை தாக்குதலில் பலியானதாக தெரியவந்துள்ளது.

சிரியா மற்றும் ஈராக்கில் அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்து வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலும் தங்கள் ஆதிக்கத்தை விரிவுப்படுத்தும் நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றனர்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளை ஒன்றிணைத்து ‘கொராசான் மாகாணம்’ என்ற தனி சாம்ராஜ்ஜியத்தை ஏற்படுத்தவும் முயன்று வருகின்றனர். இந்நிலையில், இந்த இருநாடுகளுக்கும் தீவிரவாத தாக்குதல்களுக்கு திட்டமிட்டு தரும் சதி வேலைக்கு தலைமை தாங்கிவந்த ஹபிஸ் சயீத் என்பவன் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கான எல்லைப்பகுதியில் கடந்த மாதம் அமெரிக்க விமானப் படைகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

Related posts

பதுளை, ஹாலிஎல பகுதியில் புகையிரதம் தடம்புரள்வு

wpengine

தொடர் குண்டுத் தாக்குதல்கள் – எந்த ஒரு சமுதாயத்தையும் குற்றம் சாட்ட வேண்டாம் -TNA

wpengine

மேலும் 22 பேருக்கு கொரோனா

wpengine