உலக செய்திகள்

ஐ.எஸ். தீவிரவாதத்தின் அடுத்த காய்நகர்த்தல் இந்தியாவுக்கு – அமெரிக்கா எச்சரிக்கை



பாக்., மற்றும் ஆப்கான் தாலிலிபான்களுடன் இணைந்து இந்தியா மீது தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. பாகிஸ்தான் தாலிபான் ஒருவனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணத்தின் அடிப்படையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்கா தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் அதில், இந்தியா மீது தாக்குதல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், விரைவில் ஊடுருவலை துவங்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இன்னும் ஒரு வேளை, அதற்கு முன் ஐ.எஸ்., அமைப்பை அழிக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா இறங்கினால், இறுதிக்கட்ட போரில் அமெரிக்காவிற்கு எதிராக இஸ்லாமியர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

(riz)

Related posts

சீனாவில் இருந்து மற்றுமொரு தொற்று

wpengine

பிரான்ஸில் மீண்டும் முடக்கம்

wpengine

இஸ்ரேல் படையினரின் தாக்குதலில் 16 பலஸ்தீனர்கள் உயிரிழப்பு…

wpengine